தையிட்டி போராட்டக்களத்தில் வைத்து வேலன் சுவாமிகள்
உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டமைக்கான கண்டன தீர்மானம் ஒன்று பருத்தித்துறை நகரசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நகரசபையின் இன்றைய(24.12.2025) அமர்வில் வைத்து குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பல்வேறு தீர்மானங்கள்
பருத்தித்துறை நகரசபையின் அமர்வு தவிசாளர் வின்சன் டீபோல் டக்ளஸ்போல் தலமையில்
ஆரம்பமானது.

இதன்போது மேலும், 2026 ஆண்டுக்கான நடமாடும் சேவைகளுக்கான அனுமதி, வாகன திருத்தங்களுக்கான
அனுமதிகள், மின் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான அனுமதிகள், உட்பட பல்வேறு
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

