முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் : பயங்கரவாதம் குறித்து இந்தியா கண்டனம்

ஐந்து ஆண்டுகளுக்கு  முன்னர் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத்
தாக்குதல்களில்(Easter attack sri lanka), உயிரிழந்த அனைத்து உயிர்களையும் இலங்கை நினைவுகூரும்
நிலையில், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும்
கண்டிப்பதாக இந்தியா(India) கூறியுள்ளது.

குறித்த விடயத்தினை கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் (High Commission of India) தனது உத்தியோகபூர்வ எக்ஸ்(X) தளத்தில் பதிவிட்டுள்ளது.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுடனும் இலங்கை மக்களுடனும் இந்தியா ஒத்துழைப்புடன் நிற்பதாகவும் தெரிவித்துள்ளது.

ரூபாவின் மதிப்பு உயர்வு: வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு

ரூபாவின் மதிப்பு உயர்வு: வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்

இந்நிலையில், இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா(Santhosh Jha), 2019 ஆம் ஆண்டில் தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்ற தளங்களில் ஒன்றான புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்று (21.04. 2024) நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொண்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு இலங்கை மக்களுக்கு, ஒத்துழைப்பை
வெளிப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு குறுகிய பயணமாக
கொழும்புக்கு பயணித்தார்.

தனது பயணத்தின் போது, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்
தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, நாட்டின்
தலைநகரில் உள்ள நாட்டின் முக்கிய தலைவர்களுடன் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் : பயங்கரவாதம் குறித்து இந்தியா கண்டனம் | Resurrection Easter Attack India Resistance

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான நிவாரணம் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான நிவாரணம் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு

கால்நடைகளை பதிவு செய்வதை கட்டாயமாக்கவும்: அதிகாரிகளுக்கு வடக்கு ஆளுநர் பணிப்புரை

கால்நடைகளை பதிவு செய்வதை கட்டாயமாக்கவும்: அதிகாரிகளுக்கு வடக்கு ஆளுநர் பணிப்புரை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.