ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva), பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக இருந்து இம்மாதம் 31ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சவேந்திர சில்வாவின் சேவைக் காலத்தை எதிர்வரும் 31ஆம் திகதி வரை நீடித்திருந்தார்.
பதவி நீடிப்பு
புதிய அரசாங்கத்தின் கீழ் அவருக்கு பதவி நீடிப்பு கிடைக்காது என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சவேந்திர சில்வாவின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை நீக்குவதா அல்லது தக்கவைப்பதா என்பது குறித்து அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை.
இது தொடர்பில் அரசாங்கத்தின் திட்டங்கள் தொடர்பில் வினவிய போது, அதனை தொடர்வது அல்லது இல்லாதொழிப்பது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.