பாடசாலைகளில் மாணவர்களுக்கென உலக உணவுத் திட்டம் வழங்கிய அரிசியுடன் அரசாங்கத்தின் நிதியுதவியில் வழஙங்கப்பட்ட அரிசியை கலக்கவேண்டாம் என கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலக உணவுத் திட்டத்தினால்
பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்ற, மாணவர்களின் பாவனைக்கு ஏற்றதல்ல என கூறப்படும் அரிசி உலக உணவுத் திட்டத்தினால் (WFP) வழங்கப்பட்டதே தவிர அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை.
அரசு நிதியில் விநியோகிக்கப்படும் உணவு மாணவர்கள் சாப்பிடுவதற்கு ஏற்றது என்பதை அரசு உறுதி செய்கிறது.
தவறான முடிவெடித்து உயிரை மாய்த்த பாடசாலை அதிபர்
வழக்கமான தர சோதனை
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஊடாக மாகாண கல்வி நிலையங்களுக்கு அரிசி கையிருப்பு வழங்கப்பட்ட பின்னரும், மாகாண பொது சுகாதார பரிசோதகர்களின் (PHIs) உதவியுடன் வழக்கமான தர சோதனைகளுக்கு அவர்கள் ஆலோசனை வழங்குவதாக அமைச்சர் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.
யாழில் பெண்கள் பாடசாலை அருகில் சுற்றிவளைக்கப்பட்ட விடுதி: ஐவர் கைது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |