தற்போது நாடளாவிய ரீதியில் அரிசி(rice) பற்றாக்குறை காரணமாக, சில பகுதிகளில் ஒரு கிலோ இலங்கை நாட்டு அரிசியின் விலை இருநூற்று எழுபது ரூபாயாக அதிகரித்துள்ளதுடன் ஒரு கிலோ உள்ளூர் சிவப்பு பச்சை அரிசியின் விலை இருநூற்று தொண்ணூறு ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல கிராமப்புறங்களில் நாடு மற்றும் பச்சை அரிசி கிடைப்பதில்லை என்றும், இறக்குமதி செய்யப்பட்ட நாடு அரிசி கூட கடைகளில் கிடைப்பதில்லை என்றும் சில்லறை விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
கட்டுப்பாட்டு விலையில் அரிசி கிடைக்காது
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டாலும், லங்கா நாடு அல்லது பச்சை அரிசி கட்டுப்பாட்டு விலையில் கிடைக்காது என்றும் சில்லறை விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சில பகுதிகளில், அரிசி மொத்த விற்பனையாளர்கள் கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக அரிசியை விற்பனை செய்வதால் சில்லறை விற்பனையாளர்கள் அரிசி விற்பனையிலிருந்து விலகிவிட்டனர்.
அதிக விலைக்கு அரிசி விற்பனை
மேலும் அதிக விலைக்கு அரிசியைப் பெறும் சில்லறை விற்பனையாளர்கள் லாபத்தை நோக்கமாக கொண்டு அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிவப்பு அரிசி தட்டுப்பாடு ஏற்பட கடந்த அரசாங்கமே காணமென வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.