நாடளாவிய ரீதியில் முட்டை விலை மீண்டும் உயர்ந்து வருவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், முட்டைகளின் சில்லறை விலை 40 ரூபாவை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, தற்போது சில பகுதிகளில் 45 ரூபாயாக உயர்ந்துள்ளது.
குறைந்துள்ள உற்பத்தி
இருப்பினும், இரண்டு நாட்களுக்கு முன் முட்டை விலை 30 ரூபாய்க்கும் குறைவாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், உற்பத்தி குறைந்துள்ளதால் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு அடுத்த சில நாட்களில் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

