Courtesy: Sivaa Mayuri
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீனுக்கும் (Rishad Bathiudeen) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவுக்கும் (Santhosh Jha) இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பின் போது, கிழக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு உடனடித் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை பதியுதீன் எடுத்துரைத்துள்ளார்.
இதன்போது அவர் மேலும், “கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக ஒலுவில், நிந்தவூர், காரைதீவு, மாளிகைக்காடு, பாண்டியிருப்பு, மருதமுனை மற்றும் கல்முனை போன்ற பிரதேசங்களில் கரையோர அரிப்பினால் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். மாமுனை கடற்பகுதியில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட இருவர் கைது
இந்திய நிதி
இதற்கான செயற்றிட்டத்துக்கு இந்திய அரசாங்கத்திடம் இருந்து நிதியைப் பெறுவதற்கு உதவ வேண்டும்.
வடக்கில், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிலையான வாழ்வாதார வாய்ப்புக்களை வழங்குவது அவசியம்.
மேலும், இந்த இலக்கை அடைவதற்கு இந்திய அரசாங்கத்தின் கூட்டு முயற்சிகள் தேவை” என சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையிலான படகு சேவையை ஆரம்பிப்பது மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களின் அபிவிருத்தி தொடர்பான மேலும் பல முக்கிய விடயங்கள் குறித்து இந்த சநதிப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு: வெளியாகிய கருத்துக் கணிப்பு அறிக்கை
நாட்டு மக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |