சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்வியினால் அவருக்கும் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
10வது நாடாளுமன்றத்தின் முதல் விவாத அமர்வு நேற்று(03.12.2024) இடம்பெற்றது.
இதன்போது இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார்.
அருண ஜயசேகர
அதன் பின்னர், அருண ஜயசேகரவின் கருத்து தொடர்பில் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்வி நிலையியற் கட்டளைகளுக்கு எதிரானது என ஆளும் தரப்பு குற்றசாட்டுக்களை சுமத்தியது.
இதன்போது தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்வியினால் அவருக்கும் பிமல் ரத்நாயக்கவுக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருந்தது.
இது தொடர்பான விளக்கத்தை சபாநாயகருக்கு பதிலாக பிமல் ரத்நாயக்க முன்வைத்தமையே இதற்கு வழிவகுத்திருந்தது.
இதேவேளை, பண இடைக்கால நியமக் கணக்கை முன்வைப்பது தொடர்பில் உரிய நடைமுறை பின்பற்றப்படவில்லை என ரவூப் ஹக்கீம், ஹர்ஷ டி சில்வா, கயந்த கருணாதிலக்க ஆகியோர் சபையில் தெரிவித்தனர்.
அதற்குப் பதிலளித்த சபாநாயகர் பிமல் ரத்நாயக்க, செயலகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தலுக்கு அமையவே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக சபாநாயகர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.