ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்துள்ளார்.
அதற்கு மத்தியில், அமெரிக்காவின் அழுத்தங்களைப் பொருட்படுத்தாமல் இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வருகிறது.
ரஷ்யாவின் பதில்
இந்தியா–ரஷ்யா இடையேயான உறவை பாதிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவை பயனளிக்காது என ரஷ்ய வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
“நீண்டகால நட்பு மற்றும் கலாசார தொடர்புகள் காரணமாக, இரு நாடுகளின் உறவை முறிக்க முடியாது.
எந்தவொரு முயற்சியும் தோல்வியிலேயே முடியும். இந்தியா–ரஷ்யா உறவுகள் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகின்றன” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.