இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் (S. Jaishankar) இலங்கைக்கு ஒரு நாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவுடன் (Anura Kumara Dissanayake) பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, எஸ். ஜெய்சங்கர் எதிர்வரும் நான்காம் திகதி இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுடில்லியில் சந்திப்பு
இதற்கு முன்னதாக அநுரகுமார திசநாயக்க புதுடில்லிக்கு (New Delhi) விஜயம் மேற்கொண்டிருந்தவேளை ஜெய்சங்கரை சந்தித்திருந்தார்.
மேலும், இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தின்போது இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் பல திட்டங்கள் குறித்து ஆராயப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் அண்மையில் இலங்கையில் பதவியேற்ற ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.