உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்துமாறு இனியும் இந்த அரசாங்கத்திடம் கோரிக்கை விட மாட்டோமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்று (24) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது அரசாங்கத்தில் விசேட விசாரணை ஆணைக்குழுவின் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்போம்.
காசாவில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி : தெளிவான விசாரணைக்கு ஐ.நா அழைப்பு
விசாரணை ஆணைக்குழு
தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன்கொண்டு வருவதுடன், அவர்களுக்கு வழங்கக் கூடிய உயர்ந்தபட்ச தண்டனையை வழங்கவும் நடவடிக்கை எடுப்போம்.
ஐக்கிய மக்கள் சக்தி தமது ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கும் நடவடிக்கை தொடர்பில் ஏற்கனவே அறிவித்துள்ளோம். அதாவது விசேட விசாரணை ஆணைக்குழுவொன்றை நாங்கள் அமைப்போம்.
2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய கனமழை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
விசேட விசாரணை
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளையும் விசேட விசாரணையாளர்களையும் கொண்டதாக விசாரணை ஆணைக்குழு அமைக்கப்படும்.
விசாரணைகளை வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுத்து, ஆணைக்குழுவால் வழங்கப்படும் பரிந்துரைகளை செயற்படுத்தி, சட்டமா அதிபர் ஊடாக குற்றவியல் வழக்குகளை தொடர்ந்தும், இதற்காக விசேட நீதிமன்றத்தை அமைத்தும் மற்றும் சுயாதீன அரசாங்கத்தின் குற்றப்பத்திரிகை அலுவலகம் ஒன்றையும் அமைப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய படைகளுக்கு ஏற்படப்போகும் பேரிழப்பு : உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய நீண்டதூர ஏவுகணைகள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |