முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கல்வித் தகைமைகளை நாடாளுமன்றில் சமர்ப்பித்த சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தனது கல்வித் தகைமைகளை இன்று (18) நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவரின் கல்வித் தகைமைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே இதனை சமர்ப்பித்துள்ளார்.

கற்கையை கைவிட்டு அரசியலில் ஈடுபாடு

அதன்படி, முன்பள்ளிக் கல்வியை புனித பிரிட்ஜெட்ஸ் கொன்வன்ட்டிலும், தரம் 1 முதல் தரம் 5 வரையான கல்வியை புனித தோமஸ் ஆரம்பப் பாடசாலையிலும் கற்றதாக சபையில் எதிர்க் கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

கல்வித் தகைமைகளை நாடாளுமன்றில் சமர்ப்பித்த சஜித் | Sajith Submits Education Qualifications Parliament

தரம் 6 முதல் தரம் 9 வரை றோயல் கல்லூரியிலும் கற்றதாக தெரிவித்த அவர் இலங்கையில் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள மில்ஹில் கல்லூரியில் கல்வி கற்றதுடன் 1983-1984 ஆண்டு காலப் பகுதியில் இங்கிலாந்தில் பொது நிலை தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து லண்டன் பல்கலைக்கழகத்தில் இளமானி பட்டப்படிப்பை ஆரம்பித்து 1991ஆம் ஆண்டு நிறைவு செய்துள்ளார்.

பின்னர் அமெரிக்காவில் முதுமானி கற்கையை ஆரம்பித்த போதும், 1992ஆம் ஆண்டு அவரது தந்தை ரணசிங்க பிரேமதாச படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, அந்த கற்கையை கைவிட்டு நாடு திரும்பி அரசியலில் ஈடுபட்டதாகவும் சஜித் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்