சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe), எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) பார்வையிட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரணில் விக்ரமசிங்க, மருத்துவ ஆலோசனையின் பேரில் நேற்று (22) இரவு சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் இன்று (23) சிறைச்சாலை மருத்துவமனைக்கு சென்ற சஜித் பிரேமதாச அங்கு ரணிலைப் பார்வையிட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில்
இதேவேளை குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (22) கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று (22) இரவு பல அரசியல்வாதிகளும் மகசின் புதிய விளக்கமறியல் சிறைச்சாலைக்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க மற்றும் பிரசன்ன ரணதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் உள்ளிட்ட ஆதரவாளர்கள் குழுவுடன் சிறைச்சாலைக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (22) கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

