முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாவடிப்பள்ளி உழவு இயந்திர விபத்து: உயிர் பிழைத்த மாணவன் வெளியிட்ட தகவல்

அம்பாறை(Ampara) – காரைத்தீவில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் குறித்து உயிர் பிழைத்த மாணவர் ஒருவர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

கடந்த 26ஆம் திகதி பிற்பகல் நிந்தவூர் பகுதியில் இருந்து சம்மாந்துறை பகுதிக்கு சென்று கொண்டிருந்த உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 14 பேர் நீரில் மூழ்கிய நிலையில், அதில் 8 மாணவர்கள் காப்பாற்றப்பட்டனர்.

இதன்போது, 5 மாணவர்களின் சடலங்கள் முன்னர் கண்டுபிடிக்கப்பட்டதோடு, உழவு இயந்திர சாரதி மற்றும் அதில் பயணித்த மற்றுமொருவரின் சடலங்களும் அண்மையில் கண்டெடுக்கப்பட்டன.

உழவு இயந்திரம் விபத்து

இந்தநிலையில், குறித்த விபத்தில் உயிர் பிழைத்த மாணவர் ஒருவர் விபத்து குறித்து கருத்து தெரிவிக்கையில், “மத்ரசா பாடாசலையிலிருந்து காரைத்தீவுக்கு பேருந்தில் வந்தோம்.

மாவடிப்பள்ளி உழவு இயந்திர விபத்து: உயிர் பிழைத்த மாணவன் வெளியிட்ட தகவல் | Sammandurai Mavadipalli Tractor Accident Update

அப்போது மாலை 3.30 மணியளவில் அங்கு இருந்தவர்கள் உழவு இயந்திரத்தை கொண்டு ஆட்களை ஏற்றிச் செல்வதாக தெரிவித்தார்கள்.

நாங்கள் 11 பேர் உழவு இயந்திரத்தில் ஏறினோம். சிறிது தூரம் சென்றதும், வெள்ளப்பெருக்கு காரணமாக உழவு இயந்திரத்தின் முன் சக்கரம் ஒரு பக்கமாக சரிந்தது. உழவு இயந்திரத்தில் இருந்தவர்கள் அனைவரும் நீருக்குள் வீழ்ந்தோம். அப்போது உழவு இயந்திரம் முழுவதுமாக மூழ்கியது.

பெற்றோர் சம்மதம்

அந்தநேரத்தில் ஒரு நபர் வந்து இரண்டு பேரை இழுத்துக் காப்பாற்றினார். நான் அங்கிருந்து விரைந்து சென்று அருகில் இருந்த மரத்தைப் பிடித்தேன் பின்னர் மரத்தில் ஏறினேன். ஒரு படகு அருகில் வந்தது நான் கத்தினேன், கேட்கவில்லை மீண்டும் அந்த படகு சென்றுவந்ததை அவதானித்தேன். அப்போது கத்தினேன், அவர்கள் வந்து என்னை படகில் ஏற்றினார்கள்.

மாவடிப்பள்ளி உழவு இயந்திர விபத்து: உயிர் பிழைத்த மாணவன் வெளியிட்ட தகவல் | Sammandurai Mavadipalli Tractor Accident Update

நடந்ததைச் சொன்னதும் அவர்கள் போய்ப் பார்த்தார்கள். அப்போதும் ஒருவர் நீரில் அடித்துச் செல்வதை அவதானிக்க முடிந்தது. பின்னர் என்னை கரைக்கு அழைத்து வந்தார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த மாணவர்களுடைய பெற்றோர்களுக்கு அறிவித்து, அவர்கள் மறுமுனையில் நிற்கின்றோம், நீங்கள் அனுப்புங்கள் என்று கூறியதன் பின்னரே நாங்கள் மாணவர்களை உழவு இயந்திரத்தில் அனுப்பினோம் என்று நிந்தவூர் காசிபுல் உலூம் அரபுக் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.