ரியாத்தில் இருந்து கொழும்புக்கு வந்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஒக்டோபர் 26 ஆம் திகதி விமானத்தில் விமானப் பணிப்பெண்ணைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சவுதி அரேபிய நாட்டவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அடுத்த வழக்கு விசாரணை
கைது செய்யப்பட்ட பின்னர், சந்தேக நபர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் அங்கு அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
அதன்போது, ரூ. 15,000 ரொக்கப் பிணை மற்றும் ரூ. 200,000 தனிப்பட்ட பிணையில் செல்ல அவருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட வழக்கு நவம்பர் 3 ஆம் கிகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

