முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சந்தேகத்தின் பேரிலான கைது! உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

சந்தேகத்தின் பேரில் மட்டும் ஒருவரை தடுத்து வைத்திருப்பது அவரது அடிப்படை உரிமையை மீறும் செயல் என உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

2009 ஆம் ஆண்டில் முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட, அப்போது கம்பஹா மாவட்ட காவல்துறை அத்தியட்சகராக கடமையாற்றிய லஷ்மன் குரே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

 உயர் நீதிமன்றம் தீர்ப்பு

லக்ஸ்மன் குரே மீது தாக்குதல் நடத்தப்பட்டு சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டமை குறித்து இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சந்தேகத்தின் பேரிலான கைது! உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு | Sc Delivers Landmark Ruling On Detention

அமைச்சர் பெர்னாண்டோபுள்ளே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குரே, பூஸ்ஸா சிறையில் வதை செய்யப்பட்டு, நீண்ட நாட்கள் தடுப்பு காவலில் வைத்திருப்பதன் மூலம் அவரது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதாக கடந்த உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரதம முர்து பெர்னாண்டோ, நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ மற்றும் நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் ஆகியோரால் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பில், இலங்கை அரசாங்கம் பாதிக்கப்பட்ட லஸ்மன் குரேவிற்கு நஷ்டஈடாக 30,000 ரூபா வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், சித்திரவதையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இரு தற்சமயம் சேவையிலில்லாத இராணுவ அதிகாரிகள் தங்களது சொந்த பணத்திலிருந்து தலா 300,000 ரூபா செலுத்த வேண்டுமெனவும், இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தலா 200,000 ரூபா வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

மனு தாக்கல்

தண்டனை, சித்திரவதை, மனிதாபிமானமற்ற மற்றும் அவமானகரமான அணுகுமுறைகளை எதிர்கொள்ளக் கூடாது என்ற அரசியலமைப்பின் 11ஆம் பிரிவும், குற்றச்சாட்டு இல்லாமல் நீண்ட நாட்கள் தடுப்பில் வைக்க இயலாது என்ற 13(2)ஆம் பிரிவும் மீறப்பட்டுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

சந்தேகத்தின் பேரிலான கைது! உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு | Sc Delivers Landmark Ruling On Detention

இச்சம்பவம் தொடர்பாக, 2010 ஆம் ஆண்டு இருந்தபோது குரேவின் சார்பில் வழக்கறிஞர் மஞ்சுல பாலசூரிய, அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இதற்கமைய, சுமார் 14 ஆண்டுகள் கைது நிலையில் இருந்துள்ளார் என குரேவின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.