ஓய்வுபெற்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மீண்டும் சேவையில் இணைக்க இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன இதனை தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
முக்கிய தீர்மானம்
இந்த தீர்மானம் ஊழியர்கள் பற்றாக்குறையை தீர்க்கும் விதமாக எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன்படி 65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மீண்டும் சேவையில் இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதற்காக பொது சேவை ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.