முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிரடியாக கைது செய்யப்பட்ட மாணவர்கள்: பின்னணியில் இருந்த காரணம்

5000 ரூபா பெறுமதியான 57 போலி நாணயத்தாள்களை வைத்திருந்த பாடசாலை மாணவர்கள் குழுவொன்று தெல்தெனிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி – திகன பிரதேசத்தில் உள்ள வர்த்தகர் ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில் நான்கு மாணவர்களும் நேற்றையதினம் (23) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் 15 மற்றும் 17 வயதுடையவர்கள் என்பதுடன் பொருட்களைவாங்கிக்கொண்டு போலி நாணயத்தாள்களை முயன்றுள்ள நிலையில், வைத்திருந்த 57 போலி நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணை

அதனை தொடர்ந்து, அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தங்களுக்குத் தெரிந்த ஒருவரிடமிருந்து போலி நாணயத்தாள்கள் கிடைத்ததாகத் தெரிவித்துள்ளனர்.

அதிரடியாக கைது செய்யப்பட்ட மாணவர்கள்: பின்னணியில் இருந்த காரணம் | Schoolboys Arrested With Forged Currency Notes

இந்த நிலையில், திகன பிரதேசத்தில் 2021 இல் படமாக்கப்பட்ட திரைப்படம் ஒன்றின் காட்சிக்காக இந்த நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் மத்திய வங்கியின் அனுமதி பெறாமல் இந்த நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறான நோக்கங்களுக்காக அச்சிடப்படும் நாணயத் தாள்களில் பிரதிகள் என தெளிவாகக் குறிக்கப்பட்டு காட்சியை படமாக்கிய பின்னர் மத்திய வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும்.

நீதிமன்ற உத்தரவு

விசாரணையின் போது படத்தின் இயக்குனர் மற்றும் கலை இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் கண்டி மற்றும் பிலிமத்தலாவை வசிப்பவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

அதிரடியாக கைது செய்யப்பட்ட மாணவர்கள்: பின்னணியில் இருந்த காரணம் | Schoolboys Arrested With Forged Currency Notes

நான்கு பாடசாலை மாணவர்கள், படத்தின் இயக்குனர் மற்றும் கலை இயக்குனர் தெல்தெனிய நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், பாடசாலை மாணவர்களை தலா 500,000 ரூபா சரீரப் பிணையில் விடுவித்ததுடன் மற்றைய இரு சந்தேக நபர்களையும் டிசம்பர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்