Courtesy: H A Roshan
கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக சேவை மூப்பு அடிப்படையில் புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நியமனங்கள் நேற்று (06) கிழக்கு மாகாண ஆளுநரினால் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக கடமையாற்றிய எம்.வை.பைசால்
மாகாண முதலைமைச்சின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சேவை மூப்பு அடிப்படை
மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின்
செயலாளராக கடமையாற்றிய ஜீ.கோபால
ரட்ணம் பேரவை செயலாளராக நியமனம்
செய்யப்பட்டுள்ளார்.
மேலும், பேரவை செயலாளராக கடமையாற்றிய ஜனாப். ஏ.எஸ்.எம். பாயிஸுக்கு இதுவரை செயலாளர் நியமனம் வழங்கப்படவில்லை. மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின்
செயலாளராக ஜே.லியாகத் அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய எம்.எம்.நஸீர்
மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய எச்.ஈ.எம்.டப்ளியூ.ஜி.
திசாநாயக்கா விவசாய அமைச்சின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாகாண ஆளுநரின் செயலாளராக கடமையாற்றிய எல் பி.மதநாயக்கா சுகாதார அமைச்சின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதுடன் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பதில் செயலாளராக கடமையாற்றிய எம்.சிவலிங்கம் மீண்டும் மட்டக்களப்பு மாநகர ஆணையாளராக கடமையாற்ற பணிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சின் பதில் செயலாளராக கடமையாற்றிய என்.மணிவண்ணன் அவரது நிரந்தர பதவியான மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பதவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், கல்வி அமைச்சு, ஆளுநரின் செயலாளர் நியமனங்கள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.