மன்னார், கட்டுக்கரை குளத்தில் அடாத்தாக பிடிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கான
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கட்டுக்கரை குள திட்டமிடல்
முகாமைத்துவ குழுவின் தலைவர் எம்.சந்தாம்பிள்ளை சில்வா தெரிவித்துள்ளார்.
மன்னார் மெசிடோ நிறுவனம் இன்று (30) ஏற்பாடு செய்த விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“கட்டுக்கரை குளத்தில் 1500 ஏக்கருக்கு
மேற்பட்ட காணிகள் அடாத்தாக பிடிக்கப்பட்டுள்ளதால் கட்டுக்கரை குளத்தின் நீர்ப்பாசன சேவைகள்
பாதிக்கப்படுகின்றது.
இதுவரை காணிகளை அடாத்தாக பிடித்தவர்களுக்கு எதிராக எந்த
திணைக்களங்களும் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.
நாங்கள் உரிய
திணைக்களங்களிடம் முறைப்பாடு செய்தும் முறைப்பாடுகளுக்கு அமைவாக எவ்வித
நடவடிக்கைகளும் எடுக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
மேலதிக தகவல் – அ. ராயூகரன்
கிளிநொச்சியில் அறிவிப்பின்றி நிறுத்தப்பட்ட சிறுபோக செய்கை : பாதிக்கப்பட்டுள்ள விவசாயி
யாழ்ப்பாணத்தில் சீல் வைக்கப்பட்ட 3 உணவகங்கள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |