ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவில், இன்றைய தினம்(5) சப்பரத்திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் வருடாந்த மகோற்சவப் பெருவிழா இடம்பெற்று
வருகிறது.
இன்று(5) மாலை சப்பறத் திருவிழாவும், நாளை காலை தேர்த்திருவிழாவும், நாளை
மறுதினம் காலை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
கொடியேற்றத்தில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.