குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை (Shani Abeysekara) மீண்டும் காவல்துறை சேவையில் இணைத்துக் கொண்டமை
பழைய அரசியல் கலாசாரத்தையே பிரதிபலிப்பதாக மக்கள் போராட்ட முன்னணியின்
வேட்பாளர் நுவான் போபகே (Nuwan Bopage) தெரிவித்துள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மீண்டும் காவல்துறை சேவையில் இணைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், இது தொடர்பில் நுவான் போபகே கருத்து தெரிவிக்கையில், “அவர் நல்ல மனிதரா ? கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தியின்
மேடைகளில் பிரசாரத்தில் ஈடுபட்டவர்.
காவல்துறை சேவை
அவரின் கடந்த கால செயற்பாடுகள் எவ்வாறிருப்பினும் அரசியல் கலாசார
விவகாரத்தில் மீண்டும் அவரது நியமனத்தால் ஒரு பாரிய பிரச்சினை எழுந்துள்ளது.
அவர் ஓய்வு பெற்ற அதிகாரி அந்த அதிகாரி புதிய அரசால் மீண்டும் சேவையில்
இணைக்கப்பட்டுள்ளார் தேசிய மக்கள் சக்தி கடந்த தேர்தலில் இவ்வாறான அரசியல் கலாசாரம் வேண்டாம் என்று
தானே பிரசாரம் செய்தார்கள்.
ஆனால் இச்செயற்பாடு சரிதானா ? வேறு ஒரு அரசு ஆட்சிக்கு வந்து தேசபந்து
தென்னகோனை (Deshabandu Tennakoon) மீண்டும் காவல்துறை மா அதிபராக நியமித்தால் அவர்கள் என்ன சொல்வார்கள்
அது சரியா ?
அரசியல் கலாசாரம்
அரசியலில் ஆதரவாளர்களுக்கு பதவி வழங்குவதா புதிய அரசியல் கலாசாரம் கடந்த
நல்லாட்சி அரசும் ஆட்சிக்கு வந்தவுடனேயே அவசர அவசரமாக பல செயற்பாடுகளை முன்னெடுத்தது.
பலருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன பல்வேறு வழிகளில் பலர்
கைதுசெய்யப்பட்டனர் பசில் ராஜபக்ச (Basil Rajapaks) கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்.
மேலும், நாமல் ராஜபக்ச (Basil Rajapaksa) தண்டிக்கப்படுவார் என்று கூறப்பட்டது இதெல்லாம் தேர்தல் பிரசாரமாகவே செய்யப்பட்டது தேர்தலுக்குப் பிறகு ஒன்றும்
நடக்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.