வவுனியாவில் (Vavuniya) உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் மாணவன் பலத்த காயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (10) வவுனியா வைரவபுளியங்குளத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பளம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா வைரவளியங்குளத்தில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்றல்
செயற்பாட்டை முடித்து வீதியால் குறித்த மாணவன் வந்து கொண்டிருந்துள்ளார்.
மாணவன் காயம்
இதன்போது, மாணவன் மீது
வைரவபுளியங்குளத்தில் வழமையாக கூடி நிற்கும் போதைக்கு அடிமையான இளைஞர்கள் குழு
கண்ணாடி துண்டுகளால் வெட்டியுள்ளனர்.
இதையடுத்து, மாணவன் காயம் அடைந்த நிலையில் அங்கு நின்றவர்களால் தனியார்
வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
போதை ஆசாமிகள்
இந்தநிலையில், குறித்த போதை ஆசாமிகள் தாக்குதலை நடத்தி விட்டு அங்கிருந்து தப்பி
சென்றுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக இந்த போதை அடிமையான இளைஞர்கள் குழு அப்பகுதியில் உள்ள தனியார்
கல்வி நிலையங்களில் கற்றல் செயற்பாட்டை முடித்து வரும் மாணவர்கள் மீது
தாக்குதலை நடத்துவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பில் வவுனியா காவல்துறையினர் அசமந்தமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.