முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிறைச்சாலை வைத்தியசாலை பணிப்பாளரின் திடுக்கிடும் தகவல்கள்

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்க குறித்த பதவியில் நியமனம் வழங்கப்படாமல் எட்டு வருடங்கள் கடமையாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை சிறைச்சாலை வைத்தியசாலை பணிப்பாளர் ருக்ஷான் பெல்லன யூரியூப் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

ஆணைக்குழு விசாரணை

“எவ்வித வைத்திய நிர்வாக திறமைகளும் அற்ற, அத்தோடு மன்னாருக்கும் அப்பால் இருக்கும் வைத்தியாசலைக்கு கூட நியமிக்க முடியாத தகுதியற்ற இவருக்கு நியமனம் வழங்கியவரை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு விசாரணை செய்ய வேண்டும்.

சிறைச்சாலை வைத்தியசாலை பணிப்பாளரின் திடுக்கிடும் தகவல்கள் | Shocking Information From Prison Hospital Director

இவர் குறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படும் போது அங்கொடை மனநல வைத்தியசாலையில் கடமையாற்றினார்.

ஒரு தகுதியற்றவரை கொழும்பின் மர்மஸ்தானமான வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்பியது யார்? தற்போது வைத்திய சேவை அத்தியட்சகர் நாயகமாக இருப்பவரே அவரை அங்கு நியமித்துள்ளார்.” என்றார்.

கைது நடவடிக்கை

கடந்த 2024 ஆம் ஆண்டில், கைதி ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்ற பின்னர், அவர் தொடர்ந்தும் அங்கு தங்கி சிகிச்சைப் பெறுவதற்காக இலஞ்சமாக, 1,500,000 ரூபா கோரப்பட்டதோடு, அதில் 300,000 ரூபா இலஞ்சமாகப் பெறப்பட்டதாக ஹேமந்த ரணசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டது. 

சிறைச்சாலை வைத்தியசாலை பணிப்பாளரின் திடுக்கிடும் தகவல்கள் | Shocking Information From Prison Hospital Director

அதற்கமைய, கடந்த (13) ஆம் திகதி காலை புறக்கோட்டையில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் வைத்து, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.