தென்னிந்திய பாடகர் மனோ (Mano) இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இசைநிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநலையில், நேற்றையதினம் (15) யாழ். பலாலி விமானநிலையத்தினூடாக அவர் இலங்கை வந்தடைந்துள்ளார்.
தொடர்ந்து அவர் நல்லூர் கந்தசுவாமி ஆலய தரிசனத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழ பாடல்களை தொடர்ந்து பாடுவதற்கு ஆர்வமாகவே உள்ளதாகவும் அதற்கான வாயப்புக்கள்
கிடைக்கும் போது, பாடுவேன் எனவும் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

