முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழர் பகுதியில் சிங்கள குடியேற்றம் நிறுத்த வேண்டும்: ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஒருங்கிணைப்பாளர்

தமிழர் பகுதியில் சிங்கள குடியேற்றம் செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்த
வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்ரனிசில் ராஜ்குமார்
தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இந்த நடைமுறை பின்பற்றப்படா விட்டால் இனங்களுக்கிடையே பாரிய முறுகல் நிலை ஏற்பட்டு இன மத கலவரங்களால் இரத்த ஆறு ஒடும் வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி  காரியாலயத்தில் இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விகாரை பிரச்சினை

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் தையிட்டி விகாரைகள் விவகாரத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றினைந்து எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது விகாரைக்கு ஊடகவியலாளர்கள் செல்வத்கு பொலிஸார் அனுமதியளிக்காது வீதியில் தடுத்து நிறுத்தினர்.

எனவே இனவாதம், மதவாதம் பேசக்கூடாது ஊடக சுதந்திரம் வேண்டும் என
ஆட்சியை கைப்பற்றிய தற்போதைய அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை மறுக்கின்றனரா. எங்களுக்கு சந்தேகமாக இருக்கின்றது.

தமிழர் பகுதியில் சிங்கள குடியேற்றம் நிறுத்த வேண்டும்: ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் | Sinhalese Settlement In Tamil Areas Stopped

ஜனாதிபதி ஆட்சி பீடம் ஏறும் போது என்ன சொல்லி நாட்டை பொறுப்பெடுத்தார் ஊடக
சுதந்திரம் தேவை என்றார். ஆனால் தையிட்டி விவகாரத்தில் ஊடகவியலாளர்களின்
சுதந்திரம் முற்றுமுழுதாக தடுக்கப்பட்டுள்ளது என கருதுகின்றோம்.

இந்த விகாரை பிரச்சினை நீண்ட காலமாக இடம்பெற்று வருகின்றது. இதற்கு அரசாங்கம்
முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். அவ்வாறே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள
மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரை விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி தமிழர்களுக்கான
இந்த தீர்வுளை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

இன முறுகல் 

அதேவேளை தமிழர்களின் நிலங்களில் சட்டவிரோதமான சிங்கள குடியேற்றங்களை
தடுக்கவேண்டும் இந்த சட்டவிரோத குடியேற்றங்களை தடுக்காது விட்டால் நிச்சயமாக
இனங்களுக்கிடையே முறுகல் ஏற்படும். இதனால் மீண்டும் இரத்த ஆறு ஒடும் வாய்ப்புக்கள் உள்ளது.

தமிழர் பகுதியில் சிங்கள குடியேற்றம் நிறுத்த வேண்டும்: ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் | Sinhalese Settlement In Tamil Areas Stopped

கடந்த காலத்தில் யுத்தத்தினால் மூன்று இனங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு
பொருளாதார சுமையினால் தாங்கமுடியாத நாடாக இலங்கை உள்ளதுடன் வாழ்க்கை செலவை
எடுத்துக் கொண்டால் தேங்காயின்விலை, அரிசி, உப்பின் விலைகள் சொல்லதேவையே இல்லை.

அப்படியான நாட்டிலே மீண்டும் இனமுறுகல் ஏற்பட்டு மத, இன கலவரங்கள் உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றது.

எனவே ஜனாதிபதி தமிழர்களின் நிலங்களில் சிங்களவர்களை திட்டமிட்டு குடியேற்றம்
செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்தி தீர்வை பெற்றுக் கொடுக்க ஆவண செய்யுமாறும்
இனங்களுக்கிடையிலான ஒற்றுமை புரிந்துணர்வு நல்லிணக்கத்தை கட்டியொழுப்பி
முழுமையான ஊடக சுதந்திரத்தை இலங்கை தேசத்தில் உறுதிப்படுத்த வேண்டும் என
கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.