சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் சீரியல் தொடங்கிய சில வாரங்களுக்கு பின் டாப் சீரியலாக ஓடிக் கொண்டிருக்கிறது சிறகடிக்க ஆசை. கதைக்களமும் குடும்ப பாங்காக மக்கள் ரசிக்கும் வண்ணம் அமைய ரசிகர்களும் பேராதரவு கொடுத்து வருகிறார்கள்.
இன்றைய எபிசோடில் அண்ணாமலை குடும்பம் ஸ்ருதி-ரவியின் முதல் திருமண நாளை கொண்டாட தயாராகிறார்கள். அனைவரும் மண்டபத்திற்கு வர ஸ்ருதியை மட்டும் காணவில்லை.
இந்த விஷயத்தை ரவி, முத்து-மீனாவிடம் கூற இருவரும் அவரை தேடி அலைகிறார்கள்.
புரொமோ
பின் அடுத்த வார புரொமோவில் முத்து-மீனா, ஸ்ருதி டப்பிங் ஸ்டூடியோ சென்று கேட்க அவர் அங்கு வரவில்லை என்கிறார்கள். மண்டபத்தில் விஜயா, ஸ்ருதி மட்டும் வரவில்லை என பதற்றமடைய ரவி என்ன செய்வது என தெரியாமல் முழிக்கிறார்.
இதனை பார்த்த ஸ்ருதியின் அப்பா, எனக்கு என்னவோ புரியவில்லை, பிரச்சனை மட்டும் ஆகட்டும் அப்புறம் இருக்கு இவர்களின் குடும்பத்திற்கு என கோபமாக கூறுகிறார்.
இந்த பிரச்சனையை முத்து முடித்து வைப்பாரா அல்லது என்ன ஆகப்போகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.
View this post on Instagram