முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நுவரெலியா சீதாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி விழா

நுவரெலியா சீதாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வினை தொடர்ந்து நேற்று (06) ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தி சீதையம்மன சமேத ஸ்ரீ
இலட்சுமணன் ஸ்ரீ ஆஞ்சநேயர் உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட விசேட
ஊர்தியில் ஊர்வலம் சீதாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலயம் நோக்கி சென்றது.

ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தி சீதையம்மன சமேத ஸ்ரீ இலட்சுமணன் ஸ்ரீ ஆஞ்சநேயர்
உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட விசேட ஊர்தியில் காலை 8.00 மணிக்கு
நுவரெலியா ஹாவாஎலிய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இருந்து ஊர்வலம்
ஆரம்பமாகி உடபுஸ்சல்லாவ வீதி வழியாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையம், தர்மபால சுற்றுவட்டம், நுவரெலியா பிரதான தபால் நிலையம், கண்டி வீதி ஜனாதிபதி
மாளிகை ஊடாக கண்டி வீதியில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று அங்கு
விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

1008 சங்காபிஷேக பூஜை

அதனை தொடர்ந்து அங்கிருந்து மீண்டும்
நுவரெலியா புதிய கடை வீதி, பிரதான வீதி, பதுளை வீதி வழியாக மாகாஸ்தோட்ட
கட்டுமானை ஊடாக சீத்தாஎலிய எஸ்போட் வீரந்தகத்தின் முன்பு ஆரம்பமாகிய பால்குட
பவனியுடன் ஊர்வலம் இணைந்து கொண்டு ஸ்ரீ சீதை அம்மன் ஆலயத்தை வந்தடைந்தது.

நுவரெலியா சீதாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி விழா | Sita Eliya Sitaiyamman Temple Mandala Abishekam

பின்னர் அதனை
தொடர்ந்து 1008 சங்காபிஷேக பூஜை ஏராளமான அடியார்களின் பங்குபற்றுதலுடன்
மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது இதனை தொடர்ந்து மதியம் அடியார்களுக்கு
அன்னதானமும் வழங்கப்பட்டது.

நுவரெலியா சீதாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி விழா | Sita Eliya Sitaiyamman Temple Mandala Abishekam

இதேவேளை இன்றைய தினம் காலை 8.00 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் பூஜைகள்
ஆரம்பமாகி தொடர்ந்து இராமர் சீதா திருக்கல்யா ணம் நடைபெற்று பட்டாபிஷேகம்
இடம்பெறும்.

நுவரெலியா சீதாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி விழா | Sita Eliya Sitaiyamman Temple Mandala Abishekam

அதனை தொடர்ந்து அடியார்களுக்கு அன்னதான பிரசாதம் வழங்கப்படும்.

எனவே அடியார்கள் அனைவரும் ஆலயத்திற்கு வருகைதந்து சீதா பிராட்டியின் அருளை
பெற்று சுகவாழ்வு வாழ ஆசிகூறி வருக வருக என ஆலய நிர்வாகத்தினர் அழைக்கின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்