அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் (MK.Shivajilingam) உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரான சிவாஜிலிங்கம் கடந்த சனிக்கிழமை கொழும்புக்கு (Colombo) மருத்துவ பரிசோனைக்காகச் சென்றிருந்த நிலையில் திடீரென உடல் நிலை பாதிப்புக்குள்ளானது.
சுயநினைவற்ற நிலை
இதனை அடுத்து கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கைச் சுவாச கருவியின் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் கடந்த சனிக்கிழமை தொடக்கம் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், நேற்று செவ்வாய்க்கிழமை அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளததாக கூறப்படுகிறது.