கேகாலை – தெரணியகல பிரதேச சபைக்கு போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவமானது, இன்று (06) திக்வெல்ல கந்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
அடையாளந் தெரியாத நபர்களால் இந்த கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
அத்தோடு, மோதலில் ஈடுபட்டு காயமடைந்த மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

