இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) ஆளுநர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் காலங்களில் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் எதிர்கால ஆளுநர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கப்பெற மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து
இதேவேளை அண்மையில், நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட்ட சுமார் 85 புதியவர்கள் ஓய்வூதியம் பெறும் உரிமையை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
புதிய அரசாங்கம் ஆட்சியேற்றதை தொடர்ந்து இவ்வாறான அதிரடி மாற்றங்கள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.