முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதி தேர்தல் வேண்டாமாம்! தமிழ் பொதுவேட்பாளர் வேண்டுமாம்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழர் தரப்பில் ஒரு பொது வேட்பாளரை களம் இறக்க வேண்டும் என்ற
கோரிக்கைதான் இப்போது தமிழர் அரசியலில் பிரதான பேசுபொருளாகியுள்ளது.

இதற்கமைய தமிழர் பொதுவேட்பாளர் விவகாரத்தை கையில் எடுத்துள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் நகர்வானது வடக்கு கிழக்கு நாடாளுமன்ற ஒற்றுமையை பிரதிபலிக்கிறது.

இதில் ஏழு தமிழ்க் கட்சிகளும் 7 சிவில் சமூக பிரதிநிதிகளும் கையெழுத்திட்டிருந்தமையை அவதானிக்க முடிகிறது.

தமிழ் பொது வேட்பாளர் காலத்தின் தேவை என்பது அவர்களின் ஏகோபித்த நிலைப்பாடாக காணப்படுகிறது.

ஆனால் இங்கு ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும்படி கூறிய அரசியல் தமைமை ஒருவரும் கையெழுத்திட்டமை அவரது அரசியல் நகர்வில் முரணான போக்கை காட்டுகிறது.

சிங்கள தலைமைகள் கூட ஜனாதிபதி தேர்தல் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கும் போது, குறித்த தமிழ் எம்.பியோ வேண்டாம் என்று கூறுவது எப்படி சாத்தியமான அரசியலை காட்டும்?

இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் இன்று தேர்தலை அறிவிக்கும் உரிமை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது.

இந்த வாரத்திலோ, அல்லது எதிர்வரும் வாரங்களிலோ தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இங்கு நாட்டின் ஜனாதிபதியால் பதவிக்காலத்தை மையப்படுத்தி 22ஆம் அரசியல் சீர்திருத்தம் என்ற சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளது.

இது ரணிலின் சுமையை குறைக்கும் ஒரு திட்டமிடல் என்பது பலரின் கருத்தாக அமைகிறது.

அவ்வாறு ரணிலின் சுமையை குறைக்க அந்த தமிழ் எம்.பி ஒரு பக்கம் ஜனாதிபதி தேர்தலை ஒரு வருடத்திற்கு தள்ளிப்போடலாம் என கூறுகிறார்.

ஆனால் மற்றைய பக்கம் தமிழ் பொதுவேட்பாளர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்.

திட்டமிட்ட அரசியல்களை செய்யும் எம்பிக்களின் திட்டங்கள் மக்கள் நலன் சார்ந்தவையாக இருக்கவேண்டுமே தவிர, அரச தலைமைகளின் நலனுக்காக அமைய கூடாது.

இந்த விவகாரத்தில் தமிழ் அரசு கட்சியின் முக்கிய தலைவர்கள் முரண்பாடான கருத்துக்களை பகிரங்கமாக முன்வைக்கின்றனர்.

கொள்கை ரீதியான முரண்பாடுகளுக்கு அப்பால் அரசியல் ரீதியான முரண்பாடுகள்தான் இங்கு மேலோங்கியிருக்கின்றது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.