முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பில் மேம்பாலத்தை திறந்து வைத்த அதிபர் ரணில்

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 5278 மில்லியன் ரூபா செலவில் உருவாக்கப்பட்ட மேம்பாலத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) திறந்து வைத்துள்ளார்.

கொம்பனித்தெருவுக்கும் (Slave Island) நீதிபதி அக்பர் மாவத்தைக்கும் (Justice Akbar Mawatha) இடையில் தொடருந்து பாதைக்கு மேல் நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலமே இன்று (11) திறந்து வைக்கப்பட்டது.

நாளாந்தம் 109 தொடருந்து பயணங்களுக்கு தொடருந்து கடவை மூடப்படுவதால் ஏற்படும் தாமதம் மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் நோக்கில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் (Road Development Authority) இத்திட்டத்திம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

(FTNOCRQ) 

தேசிய பாதுகாப்பு 

அரச அலுவலகங்கள், வைத்தியசாலைகள், மத வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களைக் கொண்ட வர்த்தக நகரப் பகுதியான கொம்பனித்தெரு பிரதேசத்தில் அமைந்துள்ள தொடருந்து கடவையால் நாளாந்தம் சுமார் 03 மணித்தியால நேரவிரயம் ஏற்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் மேம்பாலத்தை திறந்து வைத்த அதிபர் ரணில் | Slave Island Flyover Inaugurated By The President

இதன்படி, இந்த மேம்பாலத் திட்டம் நிறைவடைந்ததன் பின்னர் கொம்பனித்தெருவில் இருந்து காலி முகத்திடல் (Galle Face) மற்றும் அதிபர் செயலகம் நோக்கி போக்குவரத்து நெரிசலின்றி பயணிக்க முடியும்.

மேலும், வாகன நெரிசல் காரணமாக வீதியில் வீணாகும் மக்களின் நேரத்தை தேசிய பொருளாதாரத்தில் இணைக்க முடியும்.  

இந்த நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane), தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும் அதிபர் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க (Sagala Ratnayaka) போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க (Ranjith Rupasinghe )உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் மேம்பாலத்தை திறந்து வைத்த அதிபர் ரணில் | Slave Island Flyover Inaugurated By The President

கொழும்பில் மேம்பாலத்தை திறந்து வைத்த அதிபர் ரணில் | Slave Island Flyover Inaugurated By The President

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்