முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

SLBC – SLRC தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (SLBC) மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை (SLRC) ஒருங்கிணைத்து ஒரு அரச கம்பனியாகத் தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போது வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) இதனைக் குறிப்பிட்டார்.

அதற்கமைய, அப்போதிருந்த அரச தொழில்முயற்சிகள் மீள்கட்டமைப்பு அலகின் மூலம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன ஒருங்கிணைத்து கம்பனிகள் சட்டத்தின் கீழ் அரச கம்பனியாக ஸ்தாபிக்கப்பட வேண்டுமென விதந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

தொழிநுட்ப முறை

ஆனாலும், அதுதொடர்பாக இதுவரை எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆயினும், ஒன்றுக்கொன்று வித்தியாசமான தொழிநுட்ப முறைகளைப் பயன்படுத்தல், ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒலிப்பதிவுக் கூடங்களை விடவும்,

SLBC - SLRC தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம் | Slbc And Slrc Consolidated Gov Company

இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஒளிப்பதிவுக் கூடங்களுக்கு அதிகளவான இடப்பரப்பு தேவைப்படுதல், அவற்றின் ஒலி/ஒளிபரப்புக் கோபுரங்கள் பல்வேறு இடங்களில் காணப்படுதல் போன்ற காரணங்களால் ஒருங்கிணைப்பு செய்வதிலுள்ள சிரமங்களால் குறித்த இரு நிறுவனங்களையும் ஒருங்கிணைப்பதால் எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ள முடியாதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை தொடர்ந்தும் தனித்துவ அடையாளங்களுடன் கூடிய வேறான அரச தொழில்முயற்சியாக முறையான மூலோபாய வணிகத் திட்டமொன்றின் மூலம் தொழிற்பாட்டு வினைத்திறன் மற்றும் வருமான நிலைமைகளை அதிகரித்துக் கொண்டு செல்வதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது..

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.