சிறிலங்க பொதுஜன பெரமுனவின் தெஹிஅத்தகண்டிய பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
கிடைத்த தகவலின்படி, அவரது வீட்டில் கைது செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் 9 கிராம் 95 மில்லிகிராம் கஞ்சாவை வைத்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, ரத்மல் கந்துர, தெஹிஅத்தகண்டிய பகுதியில் வசிக்கும் வசந்த குமார என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிஅத்தகண்டிய காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.