முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாமல் தலைமையில் 2029 இல் ஆட்சி – சூளுரைக்கும் மொட்டு தரப்பு

2029 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்சவின் தலைமையில் நாங்களே ஆட்சியை கைப்பற்றுவோம் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன (Sanjeeva Edirimanna) தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் (SLPP) பிரதான பதவிகள் மறுசீரமைக்கப்படும் என்றும் சஞ்சீவ எதிரிமான்ன குறிப்பிட்டுள்ளார்.

சமகால அரசியல் நிலைவரம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வெகுவிரைவில் மீண்டும் கட்சியில் 

அவர் மேலும் தெரிவிக்கையில், “நடைபெற்று முடிந்த ஜனாதிபதித்
தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் காலத்தின் போது பல்வேறு காரணிகளால் சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிச் சென்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் கட்சியில் மீண்டும் ஒன்றிணைவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

நாமல் தலைமையில் 2029 இல் ஆட்சி - சூளுரைக்கும் மொட்டு தரப்பு | Slpp Rule In 2029 Under The Leadership Of Namal

கட்சியில் இருந்து விலகிச் சென்ற முன்னிலை சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கும் இடையிலான
சந்திப்பு கடந்த வாரம் நடைபெற்றது.

இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக பேசப்பட்டது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் வெகுவிரைவில் மீண்டும் கட்சியில் ஒன்றிணைவார்கள்.

பதவிகள் மறுசீரமைக்கப்படும்

கட்சியின் பிரதான பதவிகள் மறுசீரமைக்கப்படும்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை நெருக்கடிக்குள்ளாக்கும்
வகையில் இந்த அரசு செயற்படுகின்றது.

நாமல் தலைமையில் 2029 இல் ஆட்சி - சூளுரைக்கும் மொட்டு தரப்பு | Slpp Rule In 2029 Under The Leadership Of Namal

2029 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்சவின் தலைமையில் சிறிலங்கா பொதுஜன
பெரமுனவே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும். அதற்கான நடவடிக்கைகளைத்
தற்போது மேற்கொண்டுள்ளோம் என சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்