முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை அரச போக்குவரத்து சபை ஊழியர்களின் பொறுப்பற்ற நடத்தை

இலங்கையில் அரச போக்குவரத்து சபை ஊழியர்களின் பொறுப்பற்ற நடத்தைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதுதொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் தொடர்ந்தும் கிடைக்கப்பெறுகிறது பயணிகளை அசௌகரியத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 

நேற்றைய தினம் மாலை 4.15 அளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கிப்புறப்பட்ட பேரூந்தில் பயணித்த பயணிகள் சுமார் மூன்று மணித்தியாலங்கள் நடுவீதியில் காத்துக்கிடந்த அவலம் அரங்கேறியுள்ளது.

நடுவீதியிலையே மக்கள்

பயணத்தின் ஆரம்பத்திலையே பேரூந்து பழுதடைந்திருந்த்தாகவும் கிளிநொச்சி பேரூந்து சாலையில் வேறு பேரூந்து மாற்றப்படும் என்று கூறி மெதுமெதுவாக நகர்த்தப்பட்டு இயக்ச்சிக்கு அண்மையில் பேரூந்து முற்றாக பழுதடைந்துள்ளது .

மாலை 5. 40 மணியிலிருந்து நடுவீதியிலையே மக்கள் காத்துக்கிடந்துள்ளனர் எந்த மாற்று ஏற்பாடுகளுமின்றி அருகிலிருக்கும் சாலைகளுக்கு தொடர்பை ஏற்படுத்தியும் யாரும் உதவ முன்வரவில்லை என நடத்துனர் பயணிகளிடம் குறிப்பிட்டுள்ளாராம்.

இலங்கை அரச போக்குவரத்து சபை ஊழியர்களின் பொறுப்பற்ற நடத்தை | Sltb Irresponsible Behavior Of Employees

பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து இரவு 7மணிக்கு புறப்பட்ட பேரூந்து 8.15 அளவில் அந்த இடத்திற்கு வந்தபோது அந்த பேரூந்தில் ஆடுமாடுகளைப்போல அடைந்து சென்ற அவலம் நிகழ்த்தப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இருந்து 7 மணிக்கு புறப்பட்ட பேரூந்து வெள்ளிக்கிழமையாகையால் அதிகளவான பயணிகளோடே வந்திருந்தது அந்த பேழூந்திலையே. பழுதடைந்த பேரூந்தில் வந்த பயணிகள் ஏற்றப்பட்டதுடன் அவர்களிடம் நடத்துனர் புண்படுத்தும் விதமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

இங்கு மக்கள் எழுப்புகின்ற கேள்வி

ஏன் நாங்கள் அரச பேரூந்து சேவையை தேர்வு செய்கிறோம் ?

சிலவேளை வேளை பழுதடைந்தாலும் மாற்று ஏற்பாடுகளை உடனடியாக செய்வார்கள் என்பதற்காக முற்பதிவு செய்து அதற்கு மேலதிக கட்டணத்தையும் பெற்றுக்கொண்டு திருகோணமலை வரை மிகுந்த சனநெரிசலுடன் நகரவே முடியாத அளவிற்கு ஆட்களை நிறைத்து நின்றுகொண்டே பயணம் செய்வதற்கா முற்பதிவு செய்தோம்.

அரச பேரூந்து சேவை இப்படி அசண்டையீனமீக இரவு நேரத்தில் பெண் பிள்ளைகளை நடுவீதியில் நிறுத்தி வைத்திருந்த்து முறையா ?

ஐந்து மணித்தியாலங்களில் சென்றடையவேண்டிய திருகோணமலைக்கு 4.15 புறப்பட்டு நள்ளிரவு 12.15 ற்கு எட்டு மணித்தியாலங்கள் பயணிக்க வைத்த்து அந்த நேரத்திற்கான பெறுமதியை எதனுள் சேர்ப்பது. 

அதில் அனேகமானவர்கள் மூதூர் கிண்ணியா வெருகல் போன்ற பகுதிகளுக்கு செல்பவர்கள். 

இந்த பேரூந்து 8.30 திருகோணமலையில் இருந்து புறப்படும் அக்கரைப்பற்று பேரூந்தை குறிவைத்தே செல்லும் அதை நம்பி வந்தவர்கள் இந்த நிசிப்பொழுதில் திருகோணமலைக்கு சென்று என்ன செய்வது.

8.30 ற்கு பின் மூதூர் பகுதிக்கான போக்குவரத்து வழிகள் எதுவுமே இல்லை அவர்கள் இந்த நேரம் சென்று இன்னும் எத்தனை மணித்தியாலங்கள் காத்து கிடக்கவேண்டும்.

அறவிடப்படுகின்ற பணத்திற்கான சேவையை வழங்கவேண்டியது இவர்களின் கடைமைதானே அரச சேவை என்பது மக்களுக்கானது என்ற நினைப்பை இவர்களுக்கு யார் ஊட்டுவது.வடபிராந்திய சாலை முகாமையாளர் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்.

https://www.youtube.com/embed/qGBl2bOcY5A

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.