ஸ்மார்ட் (SMART) எதிர்காலம் நடமாடும் சேவை மூலம் தொழில் வாய்ப்பு உட்பட பல்வேறு உதவித் திட்டங்களை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் (K.Kanakeswaran) கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னார் மாவட்ட அதிபர் தலைமையில் நேற்றைய தினம் (17.04.2024) மாவட்டச் செயலகத்தில் விசேட ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நடமாடும் சேவை
அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த நடமாடும் சேவையில் 36 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கலந்துகொள்வதுடன் பின்தங்கிய மாணவர்கள் மற்றும் உள்நாட்டு தொழில் முறைமையிலான வேலை
வாய்ப்புகளும் குறித்த நடமாடும் சேவையுடாக வழங்கப்பட உள்ளன.
ஜனாதிபதியின் வழிகாட்டலில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்
மனுஷ நாணயக்காரவின் எண்ணக்கருவில், இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமாரின்
ஒத்துழைப்போடு, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தமானின் பங்கு
பெற்றுதலுடன் எதிர்வரும் 20ஆம் திகதி மற்றும் 21 ஆம் திகதி மன்னார் நகர பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
எனவே மக்கள் மற்றும் இளைஞர் யுவதிகளை குறித்த நடமாடும் சேவையில் கலந்துகொண்டு
பயன் பெற்றுக்கொள்ளுங்கள்” என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மஹியங்கனையில் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது
அதிகரிக்கும் பதற்றம் – இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் ஹிஸ்புல்லா
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |