முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பு தொடர்மாடி குடியிருப்பில் செயல்படும் பெரும் போதைப்பொருள் வலையமைப்பு

 பேலியாகொடை தொடர்மாடி குடியிருப்பில் போதை பொருள் விற்பனை மிகவும் பயங்கரமான முறையில் நடைபெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பேலியாகொடை புதிய பாலத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தொடர்மாடி குடியிருப்பு தொகுதியில் மிக நீண்ட காலமாக குறித்த போதை விநியோகம் நடைபெற்றுவருவதையும் அப்பகுதியை அண்டிய பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் தமது பாதுகாப்புக்காக உளவாளிகளை ஈடுபடுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.

அங்கு போதைப் பொருள் வியாபாரம் நடைபெறும் நேரத்தில் வெளியாட்கள் எவரும் உள்ளே செல்ல முடியாதவாறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பணப் பரிமாற்றம்

குறித்த தொடர்மாடி குடியிருப்பில் முதலாம் மாடியில் போதைப் பொருள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு தொடர்மாடி குடியிருப்பில் செயல்படும் பெரும் போதைப்பொருள் வலையமைப்பு | Sources Caught Selling Drugs In Colombo

முன்னர் லிப்டில் விற்பனை இடம்பெற்றுள்ளதாகவும், தற்போது மேல் மாடியில் காணப்படும் திறந்த வெளியில் இருந்து போதைப்பொருள் கீழே வீசப்பட்டு கீழ் இருந்து மேல் மாடிக்கு பணம் வீசப்பட்டே பரிமாற்றம் நடந்துள்ளது.

இதேவேளை, காலை 6 மணிக்கும் மற்றும் நண்பகல் 12 மணிக்கும் மாலை 5 மணி தொடக்கம் 9-10 மணி வரையும் இந்த வியாபாரம் நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது.

குறித்த நேரத்தில் தொடர்மாடி குடியிருப்புக்கு யாரும் செல்ல முடியாதவாறு விற்பணை மாப்பியாக்கள் குறித்த சட்டவிரோத செயலை முன்னெடுத்துள்ளனர்.

அதன்போது, அவர்கள் பாதாள குழுவினர் போல் செயற்பட்டுள்ளமை தென்னிலங்கை ஊடகம் ஒன்றின் ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

தொலைபேசிகளுக்கு தடை

விற்பனை நடைபெறும் போது லிப்டில், மாடிப் படிகளில் சிறுவர்கள் செல்வதை அவர்கள் பெரிதாக கண்டுகொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது.

கொழும்பு தொடர்மாடி குடியிருப்பில் செயல்படும் பெரும் போதைப்பொருள் வலையமைப்பு | Sources Caught Selling Drugs In Colombo

மேலும், போதை பொருள் வாங்கச் செல்லும் எவரும் அங்கு தொலைபேசி கொண்டு செல்ல முடியாது, அவ்வாறு கொண்டு சென்றால் தாக்குதல் நடத்தி அவற்றை அடாத்தாக பறித்துக்கொள்கின்றனர். 

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட தொடர்மாடி குடியிருப்பில் ஹொரோயின் ஐஸ் கொக்கேய்ன் என அனைத்து போதைப்பொருளும் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.

போதை வாங்குபவர்கள் ஒன்று கூடிய பின்னர் அவர்களின் பணம் அனைத்து சேகரிக்கப்பட்டு மேல் வீசப்பட்ட பின்னர் போதை பொருள் மேலிருந்து கீழ் வீசப்படுவது காணொளியொன்றின் மூலமாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.