தென் கொரியாவில்(south korea) மக்கள் குடியிருப்புகள் மீது, போர் விமானம் குண்டுகளை வீசி தாக்குல் நடத்தியதால் மக்கள் அதிர்ச்சிஅடைந்தனர்.
இந்த தாக்குதலில் அந்நாட்டின் போச்சியோன் கிராமத்தில் வீடுகள் மற்றும் ஒரு தேவாலயம் சேதமடைந்தன.மேலும் பொதுமக்கள் 15 பேர் காயமடைந்தனர்.
தாக்குதல் நடந்த பகுதி, தலைநகர் சியோலில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
விபத்தால் ஏற்பட்ட சேதத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்
இது குறித்து தென்கொரிய விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விபத்தால் ஏற்பட்ட சேதத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டி கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
போர் பயிற்சி முழுவதும் ரத்து
போர் பயிற்சியின் போது தவறுதலாக குண்டுகள் வீசப்பட்டதாக தென் கொரிய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. குண்டு வீச்சு சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியதோடு அப்பகுதியில் போர் பயிற்சி முழுவதும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.