தமது கல்வித் தகமை குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.
சபாநாயகரின் பட்டம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்ற நிலையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டு
இதேவேளை மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டத்தையும், ஜப்பானில் கலாநிதி பட்டத்தையும் பெற்றுக்கொண்டுள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.
தமக்கும் கட்சிக்கும் அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு பிரசாரம் செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்களுக்கு தற்பொழுது பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.