முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னிட்டு நாடு முழுவதும் நடைபெற்ற விசேட வழிபாடுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் (Easter Sunday attack) இடம்பெற்று 5 வருட நினைவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இதுவரை உரிய நீதி கிடைக்கவில்லை என பல்வேறு தரப்பினர்களாலும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தாக்குதலில் 272 பேர் பலியாகியதோடு 500இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2028ஆம் ஆண்டில் இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி - பேராசிரியர் எச்சரிக்கை

2028ஆம் ஆண்டில் இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி – பேராசிரியர் எச்சரிக்கை

மட்டக்களப்பு காந்தி பூங்கா

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்
மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஈஸ்டர் தாக்குதலில்
கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மதத்தலைவர்கள்,அரசியல்
கட்சிகளின் பிரதிநிதிகள்,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபி முன்பாக கவன
ஈர்ப்பு போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னிட்டு நாடு முழுவதும் நடைபெற்ற விசேட வழிபாடுகள் | Special Mass For Easter Sunday Attack

செய்தி – குமார்

திருகோணமலை

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று ஐந்தாண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, ஈஸ்டர் தாக்குதலில்
உயிரிழந்த மக்களை நினைவுகூர்ந்து திருகோணமலையில்  விஷேட வழிபாடு இடம்பெற்றுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னிட்டு நாடு முழுவதும் நடைபெற்ற விசேட வழிபாடுகள் | Special Mass For Easter Sunday Attack

அத்துடன், ஞாயிறு ஆராதனை
நிறைவடைந்ததையடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுத்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னிட்டு நாடு முழுவதும் நடைபெற்ற விசேட வழிபாடுகள் | Special Mass For Easter Sunday Attack

திருகோணமலை அந்தோனியார் தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி இறந்தவர்களை நினைவு
கூர்ந்து நீதிக்காக பிரார்த்தனை செய்ததும் குறிப்பிடத்தக்கது.

செய்தி – பதுர்தீன் சியானா

யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான 05ஆம்
ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சில தேவாலயங்களில்
நினைவுகூரப்பட்டுள்ளது.

அந்தவகையில், வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்திலும் ஏப்ரல் 21
உயிர்த்தஞாயிறு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான 05ஆம் ஆண்டு
நினைவேந்தல் இன்று நடைபெற்றுள்ளன. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னிட்டு நாடு முழுவதும் நடைபெற்ற விசேட வழிபாடுகள் | Special Mass For Easter Sunday Attack

இதன்போது, ஏப்ரல் 21 அன்று தேவராதனையின் போது, தமது இன் உயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு ஒரு நிமிட அகவணக்கம் செய்யப்பட்டதுடன் தேவாலயத்தின் பிரதான மணியும் ஒலிக்கப்பட்டு கூட்டுத்திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னிட்டு நாடு முழுவதும் நடைபெற்ற விசேட வழிபாடுகள் | Special Mass For Easter Sunday Attack

செய்தி – கஜிந்தன்

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம்

இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 5 வருட நினைவை முன்னிட்டு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.

செய்தி – டில்ஷான்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயம்

அதேவேளை, மட்டக்களப்பு (Batticaloa) சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 5 வருட நினைவை முன்னிட்டு விசேட வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

special-mass-for-easter-sunday-attack

உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்ம சாந்தி வேண்டியும் காயப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டியும் குறித்த ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  

இதன்போது குண்டுத்தாக்குதலில் பிள்ளையான் மற்றும் இராணுவ
புலனாய்வுத்துறை அதிகாரி தொடர்புகள் குறித்து வெளியாகும் தகவல்களை அடிப்படையாக
கொண்டு அவர்களை கைதுசெய்து விசாரணைசெய்து குற்றவாளிகளுக்கு
தண்டனைபெற்றக்கொடுக்கவேண்டும் என குறித்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின்
உறவுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னிட்டு நாடு முழுவதும் நடைபெற்ற விசேட வழிபாடுகள் | Special Mass For Easter Sunday Attack

இந்த அஞ்சலியில் குண்டுத்தாக்குதலின்போது தனது இரண்டு கண்களையும் இழந்த
சிறுமியும் கலந்துகொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஏப்ரல் 21 ம் திகதி சீயோன் தேவாலயத்தில்; இடம்பெற்ற தற்கொலை குண்டு
தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 83 பேருக்கும்
மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

special-mass-for-easter-sunday-attack

special-mass-for-easter-sunday-attack

செய்தி – சசிகரன், சரவணன் மற்றும் குமார்

ராஜபக்சர்கள் மீது கடும் குற்றச்சாட்டு : கடும் கோபத்தில் நாமல் எம்.பி

ராஜபக்சர்கள் மீது கடும் குற்றச்சாட்டு : கடும் கோபத்தில் நாமல் எம்.பி

யாழில் தனியார் பேருந்து நடத்துநர் மீது கத்திக்குத்து தாக்குதல்

யாழில் தனியார் பேருந்து நடத்துநர் மீது கத்திக்குத்து தாக்குதல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.