முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிவராத்திரியை முன்னிட்டு ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள்

இந்துக்களின் முக்கியத்துவம் வாய்ந்த மகா சிவராத்திரியை முன்னிட்டு
ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு தேற்றாத்தீவு
கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் சித்தர்களால் ஆலயத்திற்கு
ஸ்தாபிக்கப்பட்ட உயிர் லிங்கத்துக்கு அடியார்களின் கைகளினால் அபிசேகம்
செய்யும் நிகழ்வு இன்று (26) காலை சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இந்து கலாசார நிகழ்வுகள்

பக்தர்கள் இன்று பகல் வரையில் பக்தர்கள் தங்களின் கரங்களினால் லிங்கத்திற்கு
அபிசேகம் செய்யும் நிகழ்வு நடைபெறவுள்ளதுடன் மாலை விசேட யாக பூஜை மற்றும்
அபிசேக பூஜைகள் நடைபெறவுள்ளன.

வரலாற்றுப் புகழ் பெற்ற நாயன்மார்கள் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான மன்னார்
திருக்கேதீஸ்வர ஆலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி நிகழ்வு இடம்பெற்று வருகின்ற நிலையில் உலகம் முழுவதும் இருந்து
லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்தி கடன்களை செலுத்த
வருவதுடன் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

சிவராத்திரியை முன்னிட்டு ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் | Special Pooja Temples On Shivaratri

அத்துடன் சிவராத்திரி நிகழ்வுகளை முன்னிட்டு திருக்கேதீஸ்வர திருப்பணி
சபையின் ஏற்பாட்டில் பல்வேறுபட்ட இந்து கலாசார நிகழ்வுகள் மற்றும் அறநெறி சொற்பொழிவு
நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றது.

மட்டக்களப்பு சிவன் ஆதீனம்

சிவராத்திரி பெரு விழாவை முன்னிட்டு மட்டக்களப்பு சிவன் ஆதீனத்தில் 108
சிவலிங்கங்களுக்கு நல்லெண்ணெய் திருமஞ்சனம் சாத்தும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

சிவராத்திரியை முன்னிட்டு ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் | Special Pooja Temples On Shivaratri

செந்தமிழ் ஆகம முறைப்படி இவ்ஆலய பிரதமகுரு சிவ ஸ்ரீ முருகப்பிள்ளை ஜெயபாலன்
குருக்களினால் விசேட பூஜைகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு சிவன் ஆதீனத்தில் செந்தமிழ் ஆகம முறைப்படி பூசைகள் அர்ச்சனைகள் இடம் பெறுவது விசேட அம்சமாகும்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்