பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை (Batalanda Commission Report.)தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (ranil wickremesinghe)இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார்.
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை நேற்றுமுன்தினம் (14) காலை சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க(bimal ratnayake) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
சம்பந்தப்பட்ட அறிக்கை தொடர்பாக இரண்டு நாள் விவாதம் நடத்தப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ள உண்மைகள் மற்றும் அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகள் குறித்து ரணில் விக்ரமசிங்க தனது சிறப்பு வெளிப்பாட்டை வெளியிட உள்ளார்.