கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றி வந்த சிறப்பு அதிரடிப்படை உத்தியோத்தர்
ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேகநபர் நேற்றைய தினம் (20.08.2025) சிக்கியுள்ளார்.
நூதன முறையில் நிதி மோசடி
சக சிறப்பு அதிரடிப்படை உத்தியோகத்தரின் தொலைபேயை பயன்படுத்தி நூதன
முறையில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் இவர் கைதாகியுள்ளார்.
சுமார் ஒரு இலட்சத்து 38 ஆயிரம் ரூபா பணத்தை நிதி மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
கைது செய்யப்பட்டவரை நாளைய தினம் (21.08.2025) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

