யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மண்மாதிரிப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு பிரத்தியேக குழுவொன்று இன்று(29) யாழ்ப்பாணம் செம்மணிக்கு
வந்துள்ளது.
மனிதப்புதைகுழி அமைந்திருக்கும் இடத்தில் மண்மாதிரிகளைப் பரிசோதனை
செய்வதற்காக, சட்ட மருத்துவ அதிகாரிகளால் விண்ணப்பம் நீதிமன்றத்துக்கு
செய்யப்பட்டிருந்தது.
அருகாகவும் புதைகுழிகள் இருக்கலாம்
இந்த விண்ணப்பத்துக்கு நீதிமன்றம் முறையான அனுமதிகளை
வழங்கியதைத் தொடர்ந்தே, மண் மாதிரிகளை பரிசோதனை செய்வதற்காக கொழும்பிலிருந்து
குறித்த குழு வருகைதந்து பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்றது.

இதைவிட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இரசாயனவியல் பீட பேராசிரியர்களும் கார்பன்
பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர்.
அத்துடன், செய்மதிப் படங்கள் மூலமும், ட்ரோன்
மூலமும் மேற்கொண்ட ஆய்விலும் தற்போது அகழ்வுப் பணிகள் இடம்பெறும் பகுதிக்கு
அருகாகவும் புதைகுழிகள் இருக்கலாம் என்று அகழ்வுப் பணிகளை முன்னெடுத்துவரும்
பேராசிரியர் ராஜ் சோமதேவ சந்தேகம் வெளியிட்டிருந்தார்.
இந்த விடயமும் நீதிமன்றத்துக்கு அறிக்கையிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில்,
அந்தப் பகுதியில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய துப்புரவுப் பணிகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், அகழ்வுப் பணிகள் விரிவாக வாய்ப்புள்ளதாகவும்
கருதப்படுகின்றது.

