முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம்

உமா ஓயா திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் (Ebrahim Raisi) வருகையயை முன்னிட்டு  கொழும்பில்(Colombo) இன்று விசேட பாதுகாப்பு திட்டமும் போக்குவரத்து திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாக்கிஸ்தானில் தற்போதைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஈரானிய ஜனாதிபதி, அங்கிருந்து தனி விமானத்தில்  இலங்கை வரவுள்ள நிலையில், மத்தளை விமான நிலையத்தில் அவர் வரும் விமானம் தரையிறங்கி மீண்டும் புறப்பட்டுச் செல்லவுள்ளது.

அதன்படி, இன்று (24.04.2024) பிற்பகல் கொழும்பில் பல வீதிகள் பல சந்தர்ப்பங்களில் மூடப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ கூறியுள்ளார்.

இஸ்ரேலின் ஆபத்தான வலையில் வீழ்த்தப்பட்ட ஈரான்! காத்திருக்கும் சிக்கல்

மூடப்படும் வீதிகள்

அந்த வகையில், இன்று (24) காலை 9.30 முதல் 11 மணி வரை மத்தளை முதல் உமா ஓயா வரையான வீதி மூடப்படும் எனவும் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மீண்டும் வீதி மூடப்பட்டு மத்தள விமான நிலையத்தைச் சுற்றி விசேட பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம் | Special Transport Plan In Colombo Today

அத்துடன் கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை மற்றும் இரவு 9:30 மணி முதல் இரவு 10:30 மணி வரை மூடப்படவுள்ளது.

மேலும் அதிவேக வீதியில் இருந்து பேலியகொட, ஒருகுடவத்த சந்தி, தெமட்டகொட, பொறளை, டி.எஸ்.சேனநாயக்க சந்தி, ஹோர்டன் பிளேஸ், ஹோர்டன் சுற்றுவட்டம், கிரீன் பாத், நூலக சுற்றுவட்டம், ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, லிபர்ட்டி சுற்றுவட்டம், ஆர் ஏ டி மெல் மாவத்தை, சாந்த மைக்கல் வீதி, காலி வீதி இருந்து கோட்டை வரையிலான வீதி, ஹில்டன் ஹோட்டல் வரையான வீதி ஆகிய மூடப்படவுள்ளன.

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம் | Special Transport Plan In Colombo Today

கொழும்பு லோட்டஸ் சுற்றுவட்டம் பிற்பகல் 3.30 மணிக்குப் பின்னர் மூடப்படவுள்ள நிலையில் ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து காலி வீதி உட்பட பல வீதிகள் மாலை 6.00 மணி முதல் 6.30 மணி வரை மூடப்படவுள்ளன.

மீண்டும் இரவு 7.30 மணிக்குப் பின்னர் கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் பாதை மூடப்படவுள்ளதுடன் இரவு 9.30 மணிக்குப் பின்னர் கொழும்பு கோட்டையில் இருந்து NSA சுற்றுவட்ட காலி வீதி உட்பட பல வீதிகள் மூடப்படவுள்ளன. 

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம் | Special Transport Plan In Colombo Today

நாடாளுமன்றத்தின் புதிய உறுப்பினராக எம்.ஜி. வீரசேன கமகே தெரிவு

தமிழ்வின் தொடர்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரின் செயல்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்