உணவு உற்பத்தி மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு விசேட தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட தெரிவித்துள்ளார்.
கட்டாயமாக்கப்படும் நடைமுறை
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மட்டத்தில் இந்த தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு உற்பத்தி தொடர்பான சேவைகளில் ஈடுபடவிருக்கும் ஊழியர்களுக்கு காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டதை மருத்துவ அறிக்கையில் குறிப்பிடுவது கட்டாயம் என்றும் அவர் கூறியுள்ளார்.

