முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பணியிலிருந்து திடீரென விலகிய வைத்திய நிபுணர் : முடங்கிய மன்னார் வைத்தியசாலையின் சேவை

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் (District General Hospital Mannar) கடமையாற்றிய சிறுவர்களுக்கான விசேட வைத்திய நிபுணர் எவ்வித முன் அறிவித்தல் இன்றி பணியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குறித்த வைத்தியர், மன்னார் மாாவட்ட பொது வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான நோயாளர் விடுதி இலக்கம் 07 மற்றும் பிரசவிக்கின்ற குழந்தைகளுக்கான விசேட வைத்திய நிபுணராக கடமையாற்றி வந்துள்ளார்.

இந்தநிலையில், வைத்திய நிபுணர் எவ்வித முன் அறிவித்தலும் இன்றி பணியில் இருந்து விலகியுள்ளார்.

மன்னார் பொது வைத்தியசாலை

இதனால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான நோயாளர் விடுதி இலக்கம் 7 இல் அனுமதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான சிகிச்சைகள் தாமதம் அடைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

பணியிலிருந்து திடீரென விலகிய வைத்திய நிபுணர் : முடங்கிய மன்னார் வைத்தியசாலையின் சேவை | Specialist Who Resigned Abruptlychildrens Services

இதனால் குறித்த விடுதிகளில் அனுமதிக்கப்பட்ட தமது குழந்தைகளை யாழ்ப்பாணம் (Jaffna) அல்லது வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இவ் விடயத்தில் வடமாகாண ஆளுநர் உடனடியாக தலையிட்டு குறித்த வைத்திய நிபுணருக்கு பதிலாக ஒருவரை உடனடியாக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

வைத்திய நிபுணர்

குறித்த விடயம் தொடர்பில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஆஸாத் எம்.ஹனிபா கருத்து தெரிவிக்கையில், “மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த சிறு பிள்ளைகளுக்கான வைத்திய நிபுணர் திடீரென கடமைக்கு சமூகமளிக்காது இருந்தார்.

பணியிலிருந்து திடீரென விலகிய வைத்திய நிபுணர் : முடங்கிய மன்னார் வைத்தியசாலையின் சேவை | Specialist Who Resigned Abruptlychildrens Services

அவர் தொடர்ச்சியாக கடமைக்கு வருகை தராத நிலையில் அவருடன் தொடர்பை ஏற்படுத்தினோம்.

எனினும் தான் வெளிநாடு செல்ல உள்ளதாகவும், இதனால் கடமைக்கு சமூகமளிக்கவில்லை என வாட்சப் ஊடாக கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக நாங்கள் உறிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

இந்த நிலையில் தற்காலிகமாக வவுனியாவில் இருந்து ஒரு வைத்திய நிபுணரை கடமைக்கு அமர்த்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.