சர்வதேச விசாரணையில் இருந்து இலங்கையை யாரும் காப்பாற்ற முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் எந்த காலத்திலும் தான் செய்த குற்றங்களை விசாரிக்காது.
அதனால் தான், நாம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி வருவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.
எனினும், சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசாங்கத்தை கொண்டு செல்வதாயின் அது இன்னொரு நாட்டால் மட்டுமே முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதாவது, இலங்கை போர்குற்றத்தில் ஈடுபட்டதாக இன்னொரு அரசாங்கம் குற்றம் சாட்டி இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக்கூற வைக்க முடியும்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,